காங்டாக்: இந்தியாவின் அழகிய இமயமலை மாநிலமான சிக்கிம் மாநிலத்தில் ஏறக்குறைய 300 யாக் எருதுகள் பட்டினியால் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடுமையான பனிப்பொழிவின் விளைவால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2018 டிசம்பர் மாதம் முதலே, முகுதாங்க் மற்றும் யும்தாங் ஆகிய பிராந்தியங்களில் நிலவிய கடுமையான பனிப்பொழிவின் விளைவால், சுமார் 300 யாக் எருதுகள் வரை இறந்துள்ளதாக வடக்கு சிக்கிம் மாவட்ட நீதிபதி ராஜ் யாதவ் உறுதிபடுத்தியுள்ளார்.

முகுதாங் பிராந்தியத்தில் 250 யாக் எருதுகளின் பிணங்களும், யும்தாங் பிராந்தியத்தில் 50 யாக் எருதுகளின் பிணங்களும் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக யாதவ் கூறியுள்ளார்.

நீண்டகாலம் நீடித்த அதீத பனிப்பொழிவால், உண்பதற்கு உணவு எதுவும் கிடைக்காமல் போனதே, இறப்பிற்கு காரணம் என்று கூறப்படுகிறது.