300ஆண்டுகளுக்கு முந்தைய இராஜராஜசோழனின் ஆனைமங்கலம் செப்பேட்டை நெதர்லாந்து நாட்டில் இருந்து தமிழகம் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, சோழப்பேரரசின் காலம் மீண்டெழும் என தமிழ் அறிஞர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தஞ்சையில் முதன்முதலாக சோழப்பேரரசை நிறுவிய விஜயாலயசோழன் முதற்கொண்டு,முதலாம் ஆதித்தசோழன், இராஜராஜசோழன் போன்ற பண்டைய கால மன்னர்கள் அனைவருமே தங்களுக்கென்று ஒன்று அல்லது இரண்டு செப்பேடுகளைத்தான் வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் மாமன்னன் இராஜேந்திரசோழன் ஒருவன் மட்டும் தான் இதுவரை அளவில் மிகப்பெரிய செப்பேடுகளை வெளியிட்டிருக்கிறார்கள். அதுபோல வெளியிடப்பட்ட ஆனைமங்கலம் செப்பேடுகள் சுமார்  300 ஆண்டுகளுக்கும் மேலாக ஹாலந்து நாட்டில் உள்ள பழமை வாய்ந்த  லெய்டன் பல்கலைகழகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த செப்பேடுகளை தமிழகத்திற்கு கொண்டு வரும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த செப்பேடு தமிழகத்திற்கு வரப்பெற்று ஆய்வு நடத்தப்படும் பட்சத்தில், பண்டைய சோழர் கால வரலாறு உலகுக்கு தெரிய வரும் என தமிழ் அறிஞர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
செப்பேடுகள் என்றால் என்ன..?
பண்டைய கால  வரலாற்று நிகழ்வுகளை நாம் அறிந்து கொள்ளும் ஆதார மூலங்களாய் இருப்பது கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள் போன்றவை.  இவற்றில் செப்பேடுகள் என்பது,  பழங்காலத்தில் மன்னர்களின் கோவில் தானங்கள், வம்சாவளி , போர்க்குறிப்புகள், மரபு வழிக்கதைகள் போன்ற நிகழ்வுகளைப் பதிந்து வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட உலோகத் தகடு ஆகும். அரசனின் ஆணையை நேரடியாக குறிக்கும் சாசனங்களாக விளங்குகிறது. அதுபோல பண்டைய காலங்களில், நிலங்களை தானமாக வழங்கும்போது, அரசர்களால் குடிமக்களுக்கு செப்பேடுகள் மூலம் அதற்கான பதிவு தானம் வழங்கப்பட்டு உள்ளது.
இயற்கையாக ஓலைச்சுவடிகள் அழிவது போலச் செப்பேடுகள் அழிவது இல்லை. எனவே பண்டைய மக்கள் செப்பேடுகளைப் படிக்கவும் பாதுகாக்கவுமின்றிப் பூமியில் புதைத்து வைத்தனர். மேலும் பல செப்பேடுகள் உருக்கப்பட்டுப் பாத்திரங்களாக மாறின. செம்பின் உபயோகத்துக்காக பல செப்பேடுகள் அழிக்கப்பெற்றன. இவற்றை மீறி சில செப்பேடுகள் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டன.
செப்பேடுகள் அவை கிடைத்த இடத்தைக் கொண்டோ அவை இருக்கும் இடத்தைக் கொண்டோ பெயரிடப்படுகின்றன. செப்பேடுகளை அவை கிடைக்கும் இடத்தை மட்டும் வைத்து அவ்விடத்திற்கே உரியது என்று கூறமுடியாது. ஏனெனில் செப்பேடுகளை எடுத்துச் செல்வது எளிமையாக இருப்பதன் காரணமாக ஓரிடத்திற்குரியவை வேறுபட்ட தொலைவான இடங்களில் கூடக் கிடைக்கலாம்.
(உதாரணம்: சமீபத்தில் வெளியான நடிகர் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்தில், நிலம் தானத்திற்கான ஆதாரமாக வயதான முதிய பெண்மணி ஒருவர்  தாமிரப்பட்டயம் ஒன்று காட்டப்பட்டது நினைவிருக்கலாம்)
இதுபோன்ற செப்பேடுகள் சோழர்கள் காலத்தில் பெருவாரியாக பெதிவு செய்யப்பட்டு உள்ளன.  இந்த செப்பேடுகள் சோழ அரசர்களின் வம்சங்கள் மற்றும் சோழத்தில் நடந்த பலமுக்கிய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இச்செப்பேடுகள் நமக்குத்தருகின்றன..  இவைகள் அகழ்வாய்பின்போது கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. பல செப்பேடுகள் ஏற்கனவே வெள்ளையர்களின் ஆட்சி காலத்தின்போது பல நாடுகளுக்கு கடத்தப்பட்டதுடன், இன்னும் வெளிநாட்டு மியூசியங்களில் கண்காட்சிப் பொருளாகவும் பறைசாட்டிக்கொண்டிருக்கின்றன.  பழங்காலத்தைப் பற்றி அறியும் தொல்லியல் சான்றுகளாக இருந்து வரும் சுமார்  280 செப்பேடுகள் இன்னும்  சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன.
இராஜேந்திரசோழன் செப்பேடுகளின் விவரம்:

1.திருவாலங்காடு செப்பேடுகள்

2.கரந்தை செப்பேடுகள்

3.திருக்களர் செப்பேடுகள்

4.ஆனைமங்கலம்  செப்பேடுகள்

5.எசாலம் செப்பேடுகள்

மேலுள்ள இந்த ஐந்து செப்பேடுகள் மூலமாகத்தான்  நம்மால் சோழர்களின் முழுவரலாற்றையும் வரிசைப்படுத்தி அறிய முடிகின்றது. இச்செப்பேடுகள் மட்டும் இல்லையெனில் உலகப்புகழ் கொண்ட சோழப்பேரரசர்களின் வரலாறு முற்றிலும் இவ்வுலகிற்கு தெரியாது போயிருக்கும்.

ங்கைகொண்டசோழபுரத்தினைச் சுற்றிலும் மிகப்பெரிய அரண்மனைகளும், பலத்தக் கோட்டைகளும் கட்டப்பட்டன. சோழகங்கமென்னும் மிகப்பெரியஏரி கட்டுமானம் மற்றும் மக்களின் தேவைக்காகப் பயன்படுத்தப் பட்டன.கி.பி.1026இல் ராஜேந்திரசோழன் தன்னுடைய பழையத் தலைநகரை தஞ்சையிலிருந்து புதிய தலைநகரான “கங்கைகொண்டசோழபுரத்திற்கு” மாற்றி மிக சீரும்சிறப்புடன் ஆட்சி செய்துவந்தார்.

வடக்கே துங்கபத்திரை நதியும், தெற்கில் இலங்கை வரையுள்ள சோழப்பேரரசுக்கு இராஜேந்திரசோழன் ஆட்சிக்காலத்திலிருந்தும்,  அவருக்குபின் வந்த 16 சோழமன்னர்களுக்கும் சுமார் 250ஆண்டுகாலம் கங்கைகொண்டசோழபுரமே தலைநகராக புலிக்கொடி கட்டிப் பறந்தது.

கி.பி.13ம் நூற்றாண்டில் சிறப்புபெற்றிருந்த பாண்டியன் சடையவர்மன் சுந்தரப்பாண்டியனின் (கி.பி.1126-12268) படையெடுப்பினால் இந்த வரலாற்று பழம் பெருமைவாய்ந்த  நகரத்தின்  சுற்றுப்பகுதியிலுள்ள  மதில் சுவர்களும், கோவிலின் வெளிசுற்று மதில்களும், அரண்மனைகளும் தகர்க்கப்பட்டன.

அதுமட்டுமின்றி ஆங்கிலேயரின் ஆட்சியில் திருவையாற்றிலுள்ள கொள்ளிடஆற்றுக்குப் பாலம்கட்ட கங்கைகொண்டசோழபுரத்துக் கோவிலின் உள் திருசுற்று மதில்களின் கற்கள் பயன்படுத்தப்பட்டது மிகவும் வருத்ததிற்குரியது. இதில் நமக்காக நமது முன்னோர்கள் கடின உழைப்பினாலும், பலமணிநேரம் செலவழித்து செதுக்கிய கிடைத்தற்கரிய கல்வெட்டுகள் எல்லாம் ஆற்றுப் பாலத்திற்கு தூணாக நின்று “பயனற்றுப்போனது”. இன்றும் அதன் எழுத்துவரிகளை அந்தப் பாலத்தின் கீழுள்ளத்தூண்களில் காணலாம்.

சடையவர்மன் சுந்தரப்பாண்டியனுக்குப்பின் வந்த மாறவர்மன் குலசேகரன் (1268-1310) மூன்றாம் இராஜேந்திரன் என்ற சோழ மன்னனை கி.பி-1279 ல்  தோற்கடித்தான். சுமார் 450ஆண்டுகளாக புலிக்கொடிகட்டி பறந்த சோழ சாம்ராஜியத்திற்க்கு முற்றுப்புள்ளி வைத்தான் சுந்தரப்பாண்டியன் .மாளிகை மேடு என்னுமிடத்தில் மறைந்த தலைநகரின் எஞ்சிய அடிப்பகுதிகள் சிலவற்றை இன்றும் நாம் காணலாம்.

கங்கைகொண்ட சோழபுரத்திற்கு ஜெயங்கொண்டம்- கும்பகோணம் நெடுஞ்சாலை வழியே செல்லும்போது தென்கிழக்கிலுள்ள “மாளிகைமேடு”என்ற இடத்தில் இராஜேந்திரசோழன் அரண்மனையின் அடித்தள அஸ்திவார அடுக்குகள் மட்டுமே இன்று மிஞ்சியுள்ளன.

இங்கிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் அனைத்தும் தமிழ்நாடு மாநிலத்தொல்பொருள் துறையினரால் மாளிகைமேட்டிலுள்ள “அருங்காட்சியகத்தில்” பொதுமக்கள் பார்வைகாக வைக்கப்பட்டுள்ளது. கங்கைகொண்ட சோழபுரத்தின் “கோவில்” மறைந்த பின்னும் “கோவில்”மட்டும் அழியாது நின்று ராஜேந்திரசோழனின் பெருமையை நிலைநாட்டுகிறது.

ஹாலந்து (holland) நாட்டின் பொருட்காட்சி சாலையில் இருக்கும் சோழர்களின் செப்பேடுகள் 
ஆனைமங்கலச் செப்பேடுகள் ( the large leiden plates).
முதலாம் இராசராச சோழன், கடார வேந்தனாகிய மாரவிசயோத்துங்க வருமன் நாகப்பட்டினத்தில் ‘சூடாமணி வரும விகாரம்’ என்னும் புத்த விகாரைக் கட்டுவதற்குப் பேருதவி புரிந்ததுடன் ஆனைமங்கலம் என்னும் கிராமத்தினையும் பள்ளிச் சந்தமாக அளித்தான். அப்புத்த விகாரம் இராசேந்திரனது காலத்தில் முடிவுற்றதால், இவன் தன் தந்தையின் அறக்கட்டளையைச் செப்பேடுகளில் தீட்டியளித்துள்ளான். இதுவே ஆனைமங்கலச் செப்பேடு எனவும் ‘லீடன் பட்டயங்கள்’ எனவும் இச்செப்பேடுகள் ஹாலந்து நாட்டின் பொருட்காட்சி சாலையில் உள்ளமையால் இவை லீடன் செப்பேடுகள் என அழைக்கப்படுகின்றது. இத்தொகுதியில் இருபத்தொன்று செப்பேடுகள் உள்ளன்.
.
சிறிய ஆனைமங்கலச் செப்பேடுகள் (the smaller leiden plates).
இச்செப்பேடுகள் முதலாம் குலோத்துங்க சோழனின் இருபதாமாட்சியாண்டில் வெளியிடப்பட்டன. இவை இம்மன்னன், கடார வேந்தன் சோணாட்டில் கட்டிய ‘இராசராசப் பெரும் பள்ளிக்கும், இராசேந்திர சோழப் பெரும் பள்ளிக்கும் பள்ளிச் சந்த இறையிலியாக’ ஆனைமங்கலத்தில் ஒரு பகுதியுடன் ஆமூர், நாணலூர், புத்தாக்குடி, மூஞ்சிக்குடி, சந்திரபாடி, உதயமார்த்தாண்ட நல்லூர் ஆகிய ஊர்களிலிருந்து விளையும் ஆயிரக்கணக்கான கலம் நெல்லை நிவந்தம் செய்துள்ள செய்தியைக் கூறுகின்றன. மூன்றே ஏடுகள் கொண்ட இச்செப்பேடு லீடனில் உள்ளது. இதுவே, ‘சிறிய லீடன் பட்டயங்கள்’ என அழைக்கப்படுகிறது. இதை தமிழகத்திற்கு மீட்டுவந்தால் பல தகவல்களை அறிய முடியும்.

ஹாலண்டு நாட்டில் லெய்டன் நகரில் உள்ள பொருட்காட்சியகத்தில் தமிழகச்செப்பேடுகள் 2 இருக்கின்றன. அவற்றுள் ஒன்று அளவில் பெரியது. மற்றொன்று சிறியது. இதில் பெரியது முதலாம் இராஜராஜனது காலத்தில் வெளியிடப்பட்டது. இவரது காலத்தில் ஆனைமங்கலம் என்ற ஊரை, நாகப்பட்டினத்தில் பௌத்தவிகாரம் எடுப்பதற்காகக் கடாரத்து மன்னன் சூளாமணிபன்மனுக்குத் தானமாகக் கொடுத்ததால் இது ஆனைமங்கலம் செப்பேடு என்று அழைக்கப்படுகிறது. சிறியது முதலாம் குலோத்துங்கனால் வெளியிடப்பட்டுள்ளது. இச்செப்பேடு மொத்தம் 3 ஏடுகளையும் 52 வரிகளையும் கொண்டுள்ளது. 1முதல் 11 வரிகள் வரை இங்கு தரப்பட்டுள்ளது. 3 செப்பேடுகளும் ஓரு வளையத்தில் கோர்க்கப்பட்டுள்ளது. வளையத்தின் முனையில் பெரிய லெய்டன் செப்பேட்டில் இருப்பது போலவே முத்திரையில் எழுத்து உள்ளது.

தற்போது நெதர்லாந்து  நாட்டு மியூசியத்தில்  உள்ள ராஜேந்திர காலத்திலுள்ள, ஒரே வளையத்தில் கோர்க்கப்பட்டுள்ள செம்பு தகட்டிலான  21 செப்பேடுகளை கொண்டுவரும் முயற்சி நடை பெற்று வருகிறது. இந்த செப்பேடுகளில் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் எழுத்துகளில் வரலாறுகள் பதிக்கப்பட்டு உள்ளன. இவை 1862ம் ஆண்டையது என்றும், அவற்றில் சோழர்காலத்து வரலாறுகள் இருப்பதாகவும் ஆய்வார்கள் தெரிவித்து உள்ளனர்.  முதலாம் இராசராச சோழன், கடார வேந்தனாகிய மாரவிசயோத்துங்க வருமன் நாகப்பட்டினத்தில்  புத்த விகாரைக் கட்டுவதற்குப் பேருதவி புரிந்ததுடன் ஆனைமங்கலம் என்னும் கிராமத்தினையும் பள்ளிச் சந்தமாக அளித்தான். அப்புத்த விகாரம் இராசேந்திரனது காலத்தில் முடிவுற்றதால், இவன் தன் தந்தையின் அறக்கட்டளையைச் செப்பேடுகளில் தீட்டியளித்துள்ளான். இதுவே ஆனைமங்கலச் செப்பேடு எனவும் ‘லீடன் பட்டயங்கள்’ என கூறப்படுகின்றன. இவைகள்  லீடன் செப்பேடுகள் என அழைக்கப்படுகின்றது.  இத்தொகுதியில் இருபத்தொன்று செப்பேடுகள் உள்ளன். இவற்றை கொண்டுவதற்கான முயற்சிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

தகவல்: நன்றி:தமிழ் இணையக் கல்விக்கழகம் – TAMIL VIRTUAL ACADEMY

கட்டுரையாளர்:  ATSPandian