பெங்களூரு: பெங்களூருவில் கொரோனா பாதித்த 3,000 பேர் செல்போன்களை  ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு, வீடுகளை விட்டு வெளியேறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக போராடி வருகின்றன.

கர்நாடகா மாநிலத்தில், கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந் நிலையில், கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோகா, பெங்களூருவில் கொரோனா பாதித்து தனிமைப்படுத்துதலில் இருந்த 2,000 முதல் 3,000 பேர் தங்களது செல்போன்களை  ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு, வீடுகளை விட்டு வெளியேறிவிட்டதாக கூறி உள்ளார்.

அவர்கள் இப்போது எங்கு உள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும்  மாயமானவர்களை கண்காணிக்குமாறு போலீசாரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அசோகா கூறி உள்ளார்.