டெல்லி

இந்தியாவில் 500 க்கும் மேற்பட்டோர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவிடங்களில் மக்கள் கூடுவதற்கும் பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறைகளில் கைதிகளிடையே  இந்நோய்   பரவுவதைத் தடுக்க அவர்களை பரோல் அல்லது ஜாமீனில் விடுவிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

   

      சிறைக் கைதிகளிடையே கொரோனாத் தொற்று பரவுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக மாநில அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.  நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலையின்

கைதிகளை பரோல் அல்லது ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என மாநில அரசுகளை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் இது குறித்து முடிவெடுக்க மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் தலைமையில் குழு அமைக்கலாம் எனவும் யோசனைத் தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில் டெல்லி திகார் சிறையில் உள்ள 3000 கைதிகளை விடுதலை செய்ய சிறைத்துறை முடிவு செய்துள்ளது.

தமிழக அரசும் சிறைக் கைதிகளை சொந்த ஜாமீனில் விடுதலை செய்துள்ளது. கோவை மத்திய சிறையில் 136 கைதிகளும், சேலம் மத்திய சிறையில் 44,  பாளையங்கோட்டையில் 64 விசாரணைக் கைதிகளும், நன்னிலம் கிளைச் சிறையில் 11 கைதிகளும், திருவாரூர் பெண்கள் கிளைச் சிறையில் 11பெண்  கைதிகளும் நேற்று நள்ளிரவு முதல் பரோல் அல்லது ஜாமீனில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

திகார் சிறைக் கைதிகள் 3-4 நாட்களுக்குள் முறைப்படி விடுவிக்கப்படுவர் என திகார் சிறைத்துறை தெரிவித்துள்ளது.