ஐஐடி மாணவர்கள் 3000 பேருக்கு ஆய்வுக் கல்விக்கு மத்திய அரசு ரூ. 1650 கோடி நிதி உதவி

டில்லி

ஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயின்ற 3000 மாணவர்களுக்கு ஆய்வுக் கல்வி பயில ரூ. 1650 கோடி நிதி உதவியை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.

உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி மற்றும் ஐஐஎஸ் போன்ற கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவர்களில் தகுதி உள்ளோருக்கு ஆய்வுக் கல்வி பயில நிதி உதவி அளிக்க உள்ளதாக இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.     இந்த மாணவர்களுக்கு ஆய்வுக் கல்வியில் நேரடி அனுமதி அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது.

அதையொட்டி 3000 மாணவர்கள் இந்த நிதி உதவிக்கு தகுதி பெற்றுள்ளனர்.  அவர்களுக்கு முதல் இரு வருடங்களுக்கு மாதம்  ரூ. 70,000, மூன்றாம் வருடம் மாதம் ரூ.75,000 மற்றும் நான்காம், ஐந்தாம் வருடங்களுக்கு மாதம் ரூ.80,000 நிதி உதவி வழங்கப்பட உள்ளது.    இது தவிர ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.2 லட்சம் தனியாக வழங்கப்பட உள்ளது.  இந்தப் பணத்தைக் கொண்டு அவர்கள் தங்கள் ஆய்வுக்கான வெளிநாட்டுப் பயணம் உட்பட அனைத்து பயணச் செலவுகளையும் செய்துக் கொள்ளலாம் என அற்விக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு மத்திய அரசின் அமைச்சகம் தற்போது அனுமதி அளித்துள்ளது.   இதனால் 2018-19 ஆம் ஆண்டில் இருந்து இந்த மாணவர்கள் பயனடைவார்கள் என அரசு அறிவித்துள்ளது.