கர்நாடகா : கே எஸ் ஆர் அணையில் இருந்து 30000 கன அடி நீர் திறப்பு

மைசூரு

மைசூருவில் உள்ள கே ஆர் எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 30000 கன அடி நீற் திறக்கப்பட்டுளது.

கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.    அதை ஒட்டி கர்நாடக அணைகளான கபினி மற்றும் கே ஆர் எஸ் அணைகளில் நீர் கொள்ளளவை எட்டி உள்ளது.    கபினியில் இருந்து ஏற்கனவே வினாடிக்கு 35000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.   இந்த பகுதியில் உள்ள இன்னொரு அணை கே ஆர் எஸ் அணை எனப்படும் கிருஷ்ண ராஜ சாகர் அணை ஆகும்.

இந்த அணையின் மொத்த நீர் மட்டம் 124.8 அடி ஆகும்.   இந்த அணையில் தற்போது நீர் மட்டம் 123 அடியாக உள்ளது.    தற்போது இந்த அணைக்கு வினாடிக்கு 42000 கன அடி நீர் வந்துக் கொண்டு இருக்கிறது.   அணையின் நீர் மட்டும்  4 ஆண்டுகளுக்குப் பிறகு முழுக் கொள்ளளவினை  எட்டி உள்ளது.

தற்போது இந்த அணையில் இருந்து வினாடிக்கு 30000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.    மேலும் நீர் வரத்து குறையாமல் உள்ளதால் அணை நிரம்பி வழியலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.   அதை ஒட்டி இதே நிலை நீடித்தால் இன்று மாலை 6 மணிக்கு மேல் வினாடிக்கு 40000 கன அடி நீர் திறக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.