வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய டிரம்ப் புளோரிடா மாகாணத்தில் குடியேறப்போகிறார், வழியனுப்பு விழா முடிந்து அவரை கடைசி முறையாக அழைத்து சென்றது மெரைன் ஒன்.

கடந்த நான்கு ஆண்டுகளில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்திருக்கும் வேளையில், 30534 முறை உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டுள்ளார் டிரம்ப் அவர் ஆட்சியில் வேறு என்ன என்ன முக்கிய சம்பவங்கள் நடந்தது என்று எண்ணிக்கையின் அடிப்படையில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது :

26,237

அதிபராக டிரம்ப் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து பதிவிட்ட ட்வீட்களின் எண்ணிக்கை.

18
டிரம்ப் பதவியில் இருந்தபோது ஒரு நாளைக்கு சராசரி ட்வீட்களின் எண்ணிக்கை

165
“க்ரூக் ஹிலாரி” என்று குறிப்பிடப்பட்ட ட்வீட்களின் எண்ணிக்கை

199
“ஸ்லீப்பி ஜோ” பிடனைக் குறிப்பிட்டுள்ள ட்வீட்களின் எண்ணிக்கை

6,00,000

2017 டிரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோர் எண்ணிக்கை, இது 2009 ல் பராக் ஒபாமாவுக்கு வந்த கூட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

45
2017 ல் பதவியேற்ற போது அதிபர் பதவிக்கு டிரம்ப் தகுதியானவரா என்பதற்கு 45 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர்.

34
2021 பதவியில் இருந்து விலகும் போது அதிபராக டிரம்ப் பணி குறித்து 34 சதவீதம் பேர் திருப்தி தெரிவித்தனர்.

19.9 டிரில்லியன் டாலர்
ஜனவரி 20, 2017 அன்று, யு.எஸ். தேசிய கடன்.

28 டிரில்லியன் டாலர்
ஜனவரி 20, 2020 அன்று யு.எஸ். தேசிய கடன்.

4,00,000
டிரம்ப் பதவியில் இருந்து விலகும்போது கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை.

30,534
வாஷிங்டன் போஸ்டின் “உண்மைச் சரிபார்ப்பு” தரவுத்தளத்தின்படி, பதவியேற்றதிலிருந்து ட்ரம்ப் கூறிய உண்மைக்கு மாறான தகவல்களின் எண்ணிக்கை

 

 

30,03,000
கடந்த நான்கு ஆண்டுகளில் வேலைவாய்ப்பு இழந்தவர்களின் எண்ணிக்கை

64
ஜோ பைடன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி டிரம்ப் மற்றும் அவரது சட்ட ஆலோசகர்கள் தொடர்ந்த வழக்குகளின் எண்னிக்கை