30-வது சாலை பாதுகாப்பு வார விழா: விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த போக்குவரத்து துறை அமைச்சர்

சென்னை:

மிழகத்தில் இன்று சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுவதை யொட்டி பல  இடங்களில் வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகிறது.

சென்னை நடைபெற்ற  விழிப்புணர்வு பேரணியை தமிழகஎ  போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

போக்குவரத்து துறை சார்பில் 30வது சாலை பாதுகாப்பு வார நிகழ்ச்சி இன்று முதல் 10ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. . இதன் ஒரு பகுதியாக சாலை பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு என்ற தலைப்பில், சென்னை சேப்பாக்கம் முதல் தீவுதிடல் வரை விழிப்புணர்வு பேரணியை போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்தப் பேரணியில் இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு தலைக்கவசம் அணிவது, கார் ஓட்டுநர்க ளுக்கு சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதுபோல விழிப்புணர்வு பேரணி சேலம் உள்பட பல மாவட்டங்களில் நடைபெற்றது.