ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு இரண்டரை கோடியை தாண்டி உள்ளது.  இன்று (ஆகஸ்டு 31)  காலை 7 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட் டுள்ளோர் எண்ணிக்கை 2,53,81,857 ஆக உயர்ந்துள்ளது.

தொற்றுபாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 1,77,04,454 ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை  8,80,488 ஆக அதிகரித்து உள்ளது.

கொரோனா பாதிப்பில் உலக அளவில் முதலிடத்தில் அமெரிக்கா தொடர்ந்து வருகிறது.   அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,173,236  ஆகவும்,  இதுவரை  187,224 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இதுவரை 3,425,723 பேர் குணமடைந்து உள்ளனர்.

2வது இடத்தில் தொடர்ந்து பிரேசில் நாடு தொடர்கறிது.  அங்கு  கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,862,311  ஆக உள்ளது.   இதுவரை தொற்று பாதிப்பு காரணமாக   120,896 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை  3,031,559   பேர் குணமடைந்து உள்ளனர்.

3வது இடத்தில் இந்தியா தொடர்ந்து வருகிறது. ஆனால், ஒருநாள் பாதிப்பில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது.

இந்தியாவில், இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  3,619,169 ஆக  உள்ளது.  இதுவரை 64,617 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 2,772,928 பேர் குணமடைந்து உள்ளனர்.