ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 83,029,551 ஆகவும் உயிரிழப்பு 1810610 ஆக அதிகரித்துள்ளது.

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது உருமாறிய வகையில் மீண்டும் பயமுறுத்தி வருகிறது. இதையடுத்து உலக நாடுகள் மீண்டும் எச்சரிக்கையுடன் தேவையான முன்னேற்பாடுகளை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில், 703,104 பேர் புதியதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மொத்தபாதிப்பு எண்ணிக்கை 83,029,551  ஆக உயர்ந்துள்ளது. அதுபோல, கொரோனா தொற்று பலியானோர்களின் எண்ணிக்கையைம்  18.10 லட்சத்தை தாண்டி உள்ளது. அதாவது 1810610பேர் உயிரிழந்துளளனர்.

கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை  58,845,630 ஆக உயர்நதுள்ளது.

தற்போதைய நிலையில், சிகிச்சை பெற்று வருவோர் மொத்தஎண்ணிக்கை 7,857,791 ஆக உள்ளது. இவர்களில்  106,386 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.