திருச்சி பெல் நிறுவன பூங்காவில் 31 மான்கள்  பலி

திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் உள்ள பூங்காவில் அடுத்தடுத்து 31 மான்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் உள்ள பூங்காவில் 190 மான்கள்  உள்ளன.  இந்த நிலையில் பூங்காவில் கடந்த இரண்டு நாட்களில் ஒவ்வொன்றாக 31 மான்கள் உயிரிழந்திருக்கின்றன. இது குறித்த தகவல் அறிந்து, மாவட்ட வனத்துறை அதிகாரி சுஜாதா நேரில் ஆய்வு நடத்தினார்.

திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் மான்கள் பலியானதாகவும் மேலும் சில மான்களுக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளது என்றும் அறிந்தார்.

இதையடுத்து மான்களுக்கு அருகம்புல், கீரை, காய்கறி ஆகியவற்றை மிளகுடன் சேர்த்து மருந்தாக அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்  சுபா எனும் புல் வகை தீவனம் மான்களுக்கு அதிகமாக அளிக்கப்பட்டதாகவும் அவற்றை உண்டதால் செரிமான பிரச்சினை ஏற்பட்டு மான்கள் மடிந்ததாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.