நைஜீரியா இரட்டை குண்டுவெடிப்பில் 31 பேர் பலி

அபுஜா:

நைஜீரியா வடகிழக்கு மாநிலமான போர்னோவின் டம்போவா என்ற பகுதியில் இன்று 2 இடங்களில் குண்டு வெடித்தது. இந்த இரட்டை குண்டு வெடிப்பில் சிக்கி 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு போகோ ஹாரம் என்ற பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.