டில்லி:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத செயல்கள் காரணமாக இந்த ஆண்டு மட்டும் 203 தீவிரவாதிகள் மற்றும் 75 பாதுகாப்பு வீரர்ககள் உள்பட 318 பேர் கொல்லப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் லோக்சபாவில் இன்று கூறுகையில், ‘‘ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக இந்த ஆண்டு மட்டும் 203 தீவிரவாதிகள் மற்றும் 75 பாதுகாப்பு வீரர்ககள் உள்பட 318 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வட கிழக்கு பகுதியில் 51 தீவிரவாதிகள், 12 பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 91 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 14ம் தேதி வரை 337 தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது. இதில் பொதுமக்கள் 40 பேர், பாதுகாப்பு படை வீரர்கள் 75 பேர், 203 தீவிரவாதிகள் கொல்லப்டுள்ளனர். 321 பேர் காயமடைந்துள்ளனர். 91 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘மாவோயிஸ்ட், நக்சல் ஆதிக்க பகுதிகளில் கடந்த நவம்பர் 30ம் தேதி வரை 813 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது. பொதுமக்கள் 170 பேர், பாதுகாப்பு படை வீரர்கள் 75 பேர், 111 மாவோயிஸ்ட், நக்சல் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 145 பேர் காயமடைந்துள்ளனர். ஆயிரத்து 712 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார் அமைச்சர்.