32 பேர் பணி மாற்றம்: தமிழகத்தில் ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் பந்தாடப்படும் பரிதாபம்!

சென்னை,

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சியில் அமர்ந்திருக்கும் எடப்பாடி தலைமையிலான அரசில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பந்தாடப்பட்டு வருகின்றனர்.

கடந்த 10 நாட்கள் ஆட்சியின்போது பலமுறை மாவட்ட கலெக்டர்கள், முக்கிய அரசு அதிகாரிகள், காவல் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது 32 ஐஏஎஸ் அதிகாரிகளை பணி மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, திருப்பூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 7 கலெக்டர்கள் உள்பட 32 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

வி.பி.தண்டபாணி பழைய பதவி:பொன்னேரி துணை கலெக்டர், புதிய பதவி:மீன்வளத்துறை இயக்குனர் மற்றும் மீன்வளர்ச்சித்துறை மேலாண்மை இயக்குனர்

பீலா ராஜேஷ் பழைய பதவி:மீன்வளத்துறை இயக்குனர் மற்றும் மீன்வளர்ச்சித்துறை மேலாண்மை இயக்குனர், புதிய பதவி: நகரமைப்பு திட்ட ஆணையர்

கே.ராஜாமணி பழைய பதவி:தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர், புதிய பதவி:திருச்சி கலெக்டர்

சந்தீப் நந்தூரி பழைய பதவி:மதுரை மாநகராட்சி ஆணையர், புதிய பதவி:திருநெல்வேலி கலெக்டர்

என்.வெங்கடேஷ் பழைய பதவி:நிதித்துறை துணை செயலாளர் , புதிய பதவி:தூத்துக்குடி கலெக்டர்

எஸ்.சுரேஷ்குமார் பழைய பதவி:நில, நிர்வாக இணை ஆணையர், புதிய பதவி: நாகப்பட்டினம் கலெக்டர்

மோகன் பியாரே பழைய பதவி:ஓமியோபதி மற்றும் இந்திய மருத்துவ ஆணையர், புதிய பதவி:நில,நிர்வாக ஆணையர்

பி.டபிள்யூ.சி. டேவிதார் பழைய பதவி: தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர், புதிய பதவி: போக்குவரத்துத்துறை செயலாளர்

ஜெயச்சந்திரபானுரெட்டி பழைய பதவி:குடிநீர்வாரிய மேலாண்மை இயக்குனர், புதிய பதவி:நலவாழ்வு மற்றும் குடும்பநலத்துறை துணை செயலாளர்

ஜி.கே.அருண்சுந்தர் தயாளன் பழைய பதவி:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை துணை செயலாளர், புதிய பதவி: கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளர்

ஆர்.ஆனந்தகுமார் பழைய பதவி:குடிநீர் சேமிப்பு மேம்பாட்டு முகமை செயல் இயக்குனர், புதிய பதவி: நிதித்துறை கூடுதல் செயலாளர்

பூஜா குல்கர்னி பழைய பதவி: மாநில திட்ட இயக்குனர் (சர்வ சிக்‌ஷா அபியான்), புதிய பதவி:நிதித்துறை கூடுதல் செயலாளர்

எஸ்.பி.அம்ரித் பழைய பதவி:புதுக்கோட்டை துணை கலெக்டர், புதிய பதவி: வணிகவரித்துறை இணை ஆணையர்(அமலாக்கத்துறை)

வி.சாந்தா பழைய பதவி:தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக்கழக மேலாண்மை இயக்குனர், புதிய பதவி:பெரம்பலூர் கலெக்டர்

தீரஜ்குமார் பழைய பதவி: குடிநீர்வாரிய மேலாண்மை இயக்குனர், புதிய பதவி:இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு துறை செயலாளர்

வி.சந்திரசேகரன் பழைய பதவி:வேளாண்மைதுறை சிறப்பு செயலாளர், புதிய பதவி:குடிநீர் சேமிப்பு மேம்பாட்டு முகமை செயல் இயக்குனர்

மன்ட்ரி கோவிந்தராவ் பழைய பதவி: சென்னை மாநகராட்சி துணை ஆணையர்(கல்வி), புதிய பதவி:சென்னை மாநகராட்சி துணை ஆணையர்(பணிகள்)

சந்திரகாந்த் பி.காம்ப்ளே பழைய பதவி: போக்குவரத்துத்துறை செயலாளர், புதிய பதவி:தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர்

டி.ஆனந்த் பழைய பதவி: கூட்டுறவு துறை கூடுதல் பதிவாளர், புதிய பதவி:தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இணை இயக்குனர்.

அல்பி ஜான் வர்க்கீஸ் பழைய பதவி: தேவக்கோட்டை துணை கலெக்டர், புதிய பதவி:தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர்

எஸ்.அனீஸ் சேகர் பழைய பதவி:வணிகவரித்துறை இணை ஆணையர், புதிய பதவி:மதுரை மாநகராட்சி ஆணையர்

கே.எஸ்.கந்தசாமி பழைய பதவி:சென்னை மாநகராட்சி துணை ஆணையர்(பணிகள்), புதிய பதவி:சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி)

சி.என்.மகேஸ்வரன் பழைய பதவி:சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனர், புதிய பதவி:குடிநீர்வாரிய மேலாண்மை இயக்குனர்

ராஜேந்திரகுமார் பழைய பதவி:இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுதுறை செயலாளர், புதிய பதவி:தமிழ்நாடு எலக்ட்ரானிக் கார்ப்பரேசன் நிர்வாக இயக்குனர்

பிரவீன் பி.நாயகர் பழைய பதவி:சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையர், புதிய பதவி:தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக்கழக மேலாண்மை இயக்குனர்

கலெக்டர்கள் மாற்றம்

கே.எஸ்.பழனிச்சாமி திருச்சி கலெக்டர் திருப்பூர் கலெக்டர்

எம்.ரவிக்குமார் தூத்துக்குடி கலெக்டர் நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குனர்

கே.நந்தகுமார் பெரம்பலூர் கலெக்டர் மாநில திட்ட இயக்குனர்(சர்வ சிக்‌ஷா அபியான்)

எஸ்.பழனிச்சாமி நாகப்பட்டினம் கலெக்டர் கால்நடை மற்றும் பால்வளத்துறை துணைசெயலாளர்

எஸ்.ஜெயந்தி திருப்பூர் கலெக்டர் நில நிர்வாகத்துறை இணை ஆணையர்

எம்.கருணாகரன் திருநெல்வேலி கலெக்டர் விவசாயத்துறை கூடுதல் செயலாளர்

இ.சரவண வேல்ராஜ் அரியலூர் கலெக்டர் பள்ளிக்கல்வித்துறை இணை செயலாளர்.

அரசு உயர் அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்பட்டு வருவதால், நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், பணி தேக்கம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.