சிரியாவில் ரஷிய விமானம் விழுந்து நொறுங்கியதில் 32 பேர் பலியாயினர்.

சிரியாவின் லடாகியா மாகாணத்தில் ரஷ்ய விமான படைத்தளத்திற்கு சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதில் விமானத்தில் இருந்த 26 பயணிகள், 6 பணியாளர்கள் என 32 பேர் உயிரிழந்துள்ளனர்.