கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட 32 பேரை கைதட்டி வழியனுப்பி வைத்த திருச்சி ஆட்சியர், மருத்துவர்கள்…

திருச்சி:

கொரோனா தொற்றால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 32 பேர், அதில் இருந்து விடுபட்டு குணமாகி இன்று வீடு திரும்பினர். அவர்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் கைதட்டி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா அறிகுரி காரணமாக  3,045 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.  மேலும், திருச்சி அரசு மருத்துவமனையில் 40 பேர் கொரோனாவுக்கான சிகிச்சை பெற்று வந்தனர்.  இவர்களின் 32 பேர் சிகிச்சை முடிந்து இன்று காலை 9 மணிக்கு அரசு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்.

இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிவராசு, மருத்துவமனை டீன் வனிதா ஆகியோர் பழங்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தும் கைகளை தட்டியும் விடை கொடுத்தனர்.