புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகமுள்ள 32 பகுதிகள்: செப்டம்பர் 6 வரை முழு ஊரடங்கு அறிவிப்பு

புதுச்சேரி: கொரோனா பரவல் அதிகமுள்ள 32 பகுதிகளில் அடுத்த மாதம் செப்டம்பர் 6 வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்றைய நிலவரப்படி புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் மேலும் 10 நபர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 12,434 ஆக உள்ளது. சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,483. இதுவரை 190 பேர் இறந்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இதுவரை பாதிக்கப்பட்ட 12,434 பேரில் 4,483 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறப்பு விகிதம் தற்போது 1.51 சதவீதமாகவும், மீட்பு விகிதம் 62.42 சதவீதமாகவும் உள்ளது.

இந் நிலையில், தீவிரமடைந்துவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, குறிப்பிட்ட சில பகுதிகளில் ஆகஸ்டு 31ம் தேதி முதல் செப்டம்பர் 6 வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவை ஆட்சியர் அருண் வெளியிட்டு உள்ளார்.

அதன்படி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள 32 பகுதிகளின் விவரம் பின் வருமாறு:

சண்முகாபுரம்,

தட்டாஞ்சாவடி,

குண்டுப்பாளையம்,

திலாஸ்பேட்,

தென்றல் நகர்,

ஐயப்பன் நகர்,

சக்தி நகர்,

அனிதா நகர்,

அய்யனார் கோயில் தெரு(ஓ.கே பாளையம்),

புதுச்சேரி சட்டப்பேரவை

புதுச்சேரி சட்டப்பேரவை

தியாகு முதலியார் நகர்,

முல்லை நகர்,

பெரியார் நகர்,

கங்கையம்மன் கோயில் வீதி,

குறிஞ்சி நகர்,

மடுவுபேட்,

பெத்துச்செட்டிப்பேட்,

தில்லை நகர் முதல் வசந்தம் நகர் வரை,

புதுநகர், கணுவாப்பேட்டை சாலை சந்திப்பு,

ஆர்.கே நகர்,

பிச்சவீரன்பேட், வாய்க்கால் தெருக்கள் 1, 2, 3, 4,

ஜெ.ஜெ.நகர்,

ரெயின்போ நகர்,

குமரகுருபள்ளம்,

கோவிந்தசாலை,

செந்தாமரை நகர்,

சோலை நகர்,

வைத்திக்குப்பம், முத்தியால்பேட்டை நகரப் பகுதி,

முத்தைய முதலியார் தெரு,

புனித ரொசாரியோ தெரு,

காட்டாமணிக்குப்பம் தெரு,

உளவாய்க்கால்,

தர்மாபுரி & பெருமாள் கோயில் வீதி,

பொறையூர் பேட் – புதுநகர்,

பங்கூர்பேட்.

அந்த உத்தரவில், ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் அரசு மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், மருந்தகங்கள், பாலகங்கள் போன்றவை வழக்கம் போல செயல்படும். அத்யாவசிய தேவைகளுக்காக மளிகைக் கடைகள் மற்றும் காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.