32 டிஎம்சி தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும்… காவிரி ஒழுங்காற்று கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

சென்னை:

காவிரியில் இருந்து ஜூலை மாதத்திற்கான 32 டிஎம்சி தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 30-ஆவது கூட்டம் இன்று நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்கள் சார்பில் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் காவிரியில் தண்ணீர் விடுவது, கேரள மற்றும் தமிழக அணைகளில் உள்ள தண்ணீர் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, தமிழகம் சார்பில், ஜூலை மாதத்திற்கான 32 டிஎம்சி தண்ணீரை உடனே தமிழகத்துக்கு திறந்து விட உத்தரவிட வேண்டும்  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.