கொரோனா : இந்தியாவில் 325 மாவட்டங்களுக்குப் பாதிப்பு இல்லை

டில்லி

கொரோனாவால் இந்தியாவில் 325 மாவட்டங்களில் உள்ளோர் யாரும் பாதிக்கப்படவில்லை எனச் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இன்று மட்டும் 941 பேர் பாதிக்கப்பட்டு 37 பேர் மரணம் அடைந்துள்ளனர். நாட்டில் 170 மாவட்டங்களில் அதிக பாதிப்பு உள்ளதாகவும் 207 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணைச் செயலர் லவ் அகர்வால், “இந்தியாவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு 28 நாட்கள் ஆகின்றன.  ஆனால் இந்த 28 நாட்களில் இந்தியாவில் 325 மாவட்டங்களில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.

குறிப்பாக மாஹி. பாட்னா, நடியா, பிரதாப்கர், போர்பந்தர், தெற்கு கோவா, பவுரி காட்வால், பிலிபித், ரஜவுரி, விலாஸ்பூர் துர்க், ராஜ்நாந்த்காவ் ஆகிய மாவட்ட்டங்களில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை” என அறிவித்துள்ளார்.

You may have missed