எம்ஜிஆரின் 32வது நினைவு தினம்: மெரினா நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

சென்னை: 

ம்ஜிஆரின் 32வது நினைவுநாளையொட்டி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்பட தமிழக அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் மெரினாவில் ள்ள எம்ஜிஆரின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 32வது நினைவு தினம் இன்று அதிமுகவினர் மற்றும் தமிழக அரசால் அணுசரிக்கப்படுகிறது.  இதை முன்னிட்டு, மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர்  நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக அதிமுக ஏற்கனவே அறிவித்திருந்தபடி, இன்று காலை 10 மணி அளவில், தமிழக முதல்வரும், அதிமுக துணைஒருங்கிணைப்பாளருமான  எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான  ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர் கள், அதிமுக எம்பி.க்கள், எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள்  எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் உறுதிமொழி வாசிக்க, அதனை இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

உறுதிமொழியில், ‘தனிப்பட்ட குடும்பத்தின் ஆதிக்கம் தலைதூக்குவதை தடுப்போம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.