மதுரை:

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த  அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி, 11 மாத சிறை வாசத்திற்கு பின்பு தற்போதுதான் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய  அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேரா சிரியை நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை  தவறான பாதைக்கு அழைப்பு விடுத்த விகாரம் தொடர்பாக  கடந்த ஆண்டு (2018)  ஏப்ரல் மாதம் 16-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரை ஜாமினில் எடுக்கவோ,  அவருக்காக வாதாடவோ அவரது குடும்பத்தினரோ,   எந்தவொரு வழக்கறிஞரும் முன்வராத நிலையில், பல மாதங்களாக சிறையில் வாடினார். அவர் தாக்கல்  செய்த ஜாமின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தன.

சுமார் 330 நாட்கள் சிறையில் இருந்த நிலை யில், அவருக்கு கடந்த 12ந்தேதி உயர்நீதி மன்றம் மதுரை கிளை நிபந்தனை ஜாமின் வழங்கியது.

இதன் காரணமாக அவர் உடனடி யாக சிறையை விட்டு வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  அவரது ரத்த சம்பந்த உறவினர்கள் யாரும் அவரை அழைத்துப்போக முன்வராத நிலையில், அவர் வெளியே வருவதில் சிக்கல் நீடித்து வந்தது.

இந்த நிலையில், தற்போது அவரது உறவினர் ஒருவர் ஜாமினில்  கையெழுத்து போட்டதை தொடர்ந்து இன்று மதுரை பெண்கள் மத்திய சிறையில் இருந்து நிர்மலா தேவி வெளியே வந்தார்.