புதுடெல்லி: இந்த 2020ம் ஆண்டில் 338 ஐஏஎஸ் அதிகாரிகள், இதுவரை தங்களின் சொத்து விபரங்களை தாக்கல் செய்யவில்லை என்று பார்லிமென்ட் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பார்லிமென்ட் குழு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; அரசுப் பணியாளர்கள், அவர்களது அசையா சொத்துகள் குறித்த முழுமையான தகவல்களை ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும்.

இதன்படி, தங்கள் பெயரில் அல்லது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலுள்ள அசையா சொத்துகள், அடமானம் வைத்துள்ளவை குறித்த அனைத்து தகவல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆனால், இந்த 2020ம் ஆண்டின்படி, 338 ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களின் அசையா சொத்துகள் குறித்த தகவல்களை தாக்கல் செய்யவில்லை.

அரசு ஊழியர்கள் சரியான நேரத்தில் சொத்து விபரங்களை தாக்கல் செய்வதன் பொருட்டு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க, பணியாளர் மற்றும் பயிற்சித் துறைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.