சென்னையில் காவல்துறையைச் சேர்ந்த 34 பேர் கொரோனாவால் பாதிப்பு..

சென்னை:

லைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரையும் பாதித்துள்ளது சமீபத்திய பரிசோதனைகளின் மூலம்  தெரிய வந்துள்ளது.

சென்னை  காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்காவல் படை என அனைத்து காவல்துறை களையும் சேர்ந்து, இதவரை  மொத்தம் 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் மட்டும் டிஜிபி அலுவலகத்தைச் சேர்ந்த 4 பேர்  கடந்த 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில்,  சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தீயணைப்பு வீரர் உள்பட காவல்துறையை சேர்ந்த மேலும் 8 பேருக்கு நோய் தொற்று உறுதியாகி இருக்கிறது.

அத்துடன் டிஜிபி அலுவலகத்தில் மோட்டார் வாகன பிரிவில் பணிபுரியும் காவலர் ஒருவர் உள்பட திருவல்லிக்கேணி  தீயணைப்பு நிலைய அதிகாரி, சென்னை சேத்துப்பட்டு போக்குவரத்து தலைமை காவலர், சூளைமேடு காவல் நிலைய ரோந்து வாகன ஓட்டுநர், கொத்தவால்சாவடி போக்குவரத்து காவலர் அயனாவரம் போக்குவரத்து உதவி ஆய்வாளர், மெரினா காவல் நிலைய காவலர், என இதுவரை மொத்தம் 34 பேருக்கு நோய் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.