சென்னை உயர்நீதி மன்றத்திற்கு 34 நாட்கள் கோடை விடுமுறை!

சென்னை:

சென்னை  உயர்நீதிமன்றத்திற்கு  34 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுஉள்ளது. அதன்படி வரும மே 1ந்தேதி முதல் ஜூன் 3ந்தேதி வரை கோடை விடுமுறை என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை உயர்நீதி மன்ற பதிவாளர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் விடுமுறை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில்,  சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மே 1 முதல் ஜூன் 3 வரை கோடை விடுமுறை என்றும், உயர்நீதி மன்றத்தில் விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை விசாரிக்க 25 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும்,  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 15 நீதிபதிகள் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.