யோகி ஆதித்யநாத்தின் மாநிலத்தில் வேலையில்லாதோர் 34 லட்சம் பேர்..!

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 34 லட்சமாக உயர்ந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக, மாநிலத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 21.39% என்பதாக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கையில்12.5 லட்சம் கூடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உத்திரப்பிரதேச மாநில சட்டசபையில் எழுத்து மூலமாக அளிக்கப்பட்ட பதிலில், அம்மாநில தொழிலாளர் துறை அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா இத்தகவலை தெரிவித்தார்.

இந்தாண்டு பிப்ரவரி 7ம் தேதி முடிவடைந்த காலத்தில், தொழிலாளர் துறையால் நடத்தப்படும் ஆன்லைன் போர்டலில் பதிவான விபரங்களின் அடிப்படையில், மாநிலத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 33.93 லட்சம் என்பது தெரியவந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்தவகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த நிலைமையை ஒப்பிடுகையில், மாநிலத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 60% கூடியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

அதேசமயம், வேலையில்லாதோர் எண்ணிக்கை இந்தளவு அதிகரித்ததற்கான காரணம் அமைச்சரின் பதிலில் அடங்கியிருக்கவில்லை. அதேசமயம், மாநிலத்திற்கு எதிர்பார்த்த முதலீட்டு திட்டங்கள் எதுவும் வரவில்லை என்ற பொதுவான காரணம் கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-