உகாண்டா நிலச்சரிவில் 34 பேர் மரணம்

ம்பாலா

காண்டா நாட்டில் கடும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 34 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் உகாண்டாவும் ஒன்றாகும். அந்த நாட்டில் கிழக்கு பகுதியில் புடுவா மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு கடுமையான மழை பெய்து வருகிறது. அதனால் மாவட்டம் முழுவதும் வெள்ளம் ஏற்பட்டுள்ள்து.

புடுவா மாவட்டத்தில் வெள்ளத்தினால் மூன்று கிராமங்கள் மூழ்கி உள்ளன. அத்துடன் கனமழை காரணமாக அங்கு கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் பலர் சிக்கி உயிரிழந்துள்ளனர். அதில் 34 பேர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இங்கு மீட்புப் பணியை நடத்தும் அதிகாரி ஒருவர், “இந்த நிலச்சரிவில் ஏராளமானோர் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் பெரும்பாலானோர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. மரணம் அடைந்தோர் எண்ணிக்கை மேலும் உயரலாம்” என தெரிவித்துள்ளார்.

You may have missed