அசாம் கனமழை : 34000 பேர் கடும் பாதிப்பு

வுகாத்தி

சாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 34000 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் கிழக்கு பகுதியில் கடந்த சில தினங்களாகக் கன மழை பெய்து வருகிறது.

இதனால் அசாம் மாநிலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அசாம் மாநில முக்கிய நதியான ஜெய்பராலி ஆற்றில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பெருக்கால் தேமாஜி, லட்சுமிபூர், பிஸ்வநாத், சிராக் உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதிகளில் சுமார் 4200 ஏக்கர் விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

இந்த வெள்ளம் காரணமாக சுமார் 34000 பேர் கடும் பாதிப்புக்கு உள்ளாகியதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது.