நைஜீரியாவிலுள்ள பள்ளி ஒன்றில் இருந்து, அந்நாட்டின் பயங்கரவா அமைப்பான, போகோ ஹராம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 344 மாணவா்கள் விடுவிக்கப்பட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

முதலில் இந்த கடத்தல் உள்ளூர் “கொள்ளைக்காரர்கள்”  என கூறப்பட்டது. ஆனால்,  கடத்தியது தாங்கள்தான் என்று போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த நிலையில், தற்போதுகடத்தப்பட்ட மாணாக்கர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வெளியாகி உள்ள தகவலின்படி,  நைஜிரியா நாட்டின்  காட்சினா மாகாணம், கங்காரா  பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்குள்  கடந்த வாரம் திடீரென வந்த போகோ ஹராம் பயங்கரவாதிகள் கும்பல்,  ஏகே 47 ரகத் துப்பாக்கிகளைக் கொண்டு சரமாரியாக சுட்டனா். அப்போது பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவா்கள் இருந்தனா். அவர்களில் ஏராளமானோரை கடத்திச் சென்றனர்.  இதில் 344 மாணாக்கர்கள் கடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெற்றோர்கள் குழந்தைகளை விடுவிக்க வேண்டும் என அரசை வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து, பயங்கரவாத அமைப்புக்கும், அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து, மாணவா்கள் விடுக்கப்பட்டு உள்ளனர்.

இதற்காக பயங்கரவாதிகளுக்கு  பிணைத் தொகை எதுவும் அளிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால், பயங்கரவாத அமைப்புடன் அரசு  சமரசம் செய்துகொள்ளப்பட்டதா என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.

பயங்கரவாதிகளால் விடுவிக்கப்பட்ட 344 மாணவா்களையும், மாகாண ஆளுநா் அமினு பெல்லோ மசாரியை வெள்ளிக்கிழமை சந்தித்து விசாரித்தார். பின்னர் அந்த மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதைடுத்து மாணவா்கள் அனைவரையும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு அனைத்து மாணவா்களும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மேற்கத்திய கல்வி முறை இஸ்லாம் மதத்துக்கு எதிரானது என்பதால் அந்தப் பள்ளியில் தாக்குதல் நடத்தியதாக போகோ ஹராம் பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர்.