தமிழ்நாட்டில் 35ஆயிரம் போலி டாக்டர்களாம்…!

சென்னை,

மிழகத்தில் சுமார் 35 ஆயிரம் போலி மருத்துவர்கள் உள்ளனர் என்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் செயற்குழு உறுப்பினர் பிரகாசம் இந்த பகிர் தகவலை வெளியிட்டார்.

மாநிலத்தில் கடந்த ஒரே ஆண்டில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் கூறினார். மேலும்,  தமிழ்நாட்டில் போலி மருத்துவர்கள் கைது செய்யப்படுவது அதிர்ச்சி அடைய வைக்கும் தகவல் என்றும், தமிழகம் முழுவதும் சுமார் 35,000 போலி மருத்துவர்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது என்றும் கூறினார்.

போலி மருத்துவர்களை ஒழிக்க தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டியது அவசியம் என  கூறிய அவர் , கைது செய்யப்படும் போலி மருத்துவர்களுக்கு 6 மாத சிறைக்கு பதில் கடுமையான தண்டனை வழங்க வேண்டியது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்..

ஆனால், தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பாரம்பரியம் மிக்க சித்த மருத்துவத்தை பரம்பரையாக ஏராளமானோர் செய்து வருகின்றனர். அவர்களுக்கு சட்டரீதியான அங்கீகாரம் கொடுக்கப்படுவது இல்லை.

இதன் காரணமாக அவர்களையும் போலி மருத்துவர்கள் என்றே அலோபதி மருத்துவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

எத்தனையோ வியாதிகள் அலோபதி மருத்துவத்தால் குணமடையாமல், சித்த மருத்துவம் மூலம் குணமாகி வருவது ஒவ்வொருவரும் காணும் நிதர்சனமான உண்மை. ஆனால்… அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்க மட்டும் இந்திய மருத்துவ கவுன்சில் மட்டுமல்லாது, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலும் முயற்சி செய்வது இல்லை, அலோபதி டாக்டர்கள் அவர்களை வளர விடுவதும் இல்லை என்பது வருந்தத்தக்கது.

ஏற்கனவே அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, சித்த மருத்துவம் போன்ற பாரம்பரிய மருத்துவத்தை ஊக்கப்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.