சென்னை:

மிழக காவல் துறைக்கு நவீன தொழில்நுட்ப சாதனங்கள் வாங்கியதில் ரூ350 கோடி முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக லஞ்ச ஒழிப்புதுறை சம்மன் அனுப்பி உள்ளது. இது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக காவல் துறைக்கு தற்போதைய சூலுக்கு ஏற்ப நவீன ரேடியோ, வயர்லஸ் கருவிகள், தொலைத்தொடர்பு கருவிகள்,  தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்க  தமிழகஅரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அதையடுத்து, புதிய கருவிகளை வாங்க பல்வேறு நிறுவனங்களுக்கு காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவு டெண்டர் விட்டது. இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தது.

இதையடுத்து, உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, விஜிலன்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணை யில், முறைகேடு நடைபெற்றிருக்க முகாந்திரம் உள்ளதாக கூறப்பட்டது. . 16 மாவட்ட காவல் துறைக்கு உபகரணங்கள் வாங்க விடப்பட்ட டெண்டரில் 10 மாவட்டங்களுக்கான டெண்டர் ஒரே நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து,  தமிழக காவல் துறையின் தொழில்நுட்ப பிரிவில் உள்ள முக்கிய அதிகாரி உட்பட ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கும், தற்போது பதவியில் இருக்கும் உயர் காவல் அதிகாரிகளுக்கும், விசாரணை தொடர்பாக ஆஜராக விஜிலன்ஸ் சம்மன் அனுப்பி உள்ளது.

இந்த முறைகேடு நடைபெற்ற  நேரத்தில் காவல்துறை தொழில்நுட்பபிரிவு எஸ்பியாக  அன்புச் செழியன் இருந்தார். அவர் உள்பட பல உயர்  அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது காவல் துறை உயர் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.