மதுரை:

ழநி தைப்பூசத் திருவிழாவை ஒட்டி 350 சிறப்புப் பேருந்துகள் தென் மாவட்டங்களில் இருந்து இயக்கப்பட உள்ளதாக  அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

வரும் 8ந்தேதி முருகன் கோவில்களில் தைப்பூசம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.  அறுபடை வீடுகளில் ஒன்றாக பழனியில் தைப்பூசம் கோலாகலமாக கொண்டாடப்படும். தென் மாவட்டங்கள் மற்றும் கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பழனியில் குவிவார்கள்,.

இதனையொட்டி,  திண்டுக்கல், மதுரை, திருச்சி, காரைக்குடி, நத்தம், புதுக்கோட்டை, தேனி, கரூர், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய இடங்களிலிருந்தும் அதனைச் சார்ந்த பகுதிகளிலிருந்தும் பழனிக்கு வரும 05.02.2020 முதல் 09.02.2020 வரை 350 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட உள்ளது.

அதுபோல, தை பூசத்துக்கு வரும் பாதசாரிகளுக்கு  4,5,6 ஆகிய தேதிகளில் அன்னதானம் வழங்க அண்ணாமலை யார் ஆன்மிக குழு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி,  ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் சன்னதி அருகே உள்ள எல்.என். திருமண மண்டபத்தில் வருகிற 2020 பிப்ரவரி 5,6 தேதிகளில் அன்னதானம் நடைபெறுகிறது.