போனில் வந்த செக்ஸி பெண் குரல் : பிளாக்மெயிலுக்கு சிக்கிய 350 பேர் 

சென்னை

சென்னை மதுரவாயல் பகுதியில் பெண்குரலை வைத்து பிளாக்மெயில் செய்த சம்பவம்  நிகழ்ந்துள்ளது.

சென்னை மதுரவாயலைச் சேர்ந்த உதயராஜ் என்பவர், சில தினங்களுக்கு முன்பு சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்..

அப்போது பிரியா என்ற பெண் சாட்டில் அழைக்கவே, அவரிடம் ஆசைப்பட்டுப் பேசியதாகவும் அதன் பிறகு அவர் பாலியல் உறவுக்கு ஏற்பாடு செய்வதாகவும் சொல்லி பணம் பறிக்க ஆரம்பித்தார் என்றும் மேற்கொண்டு பணம் கொடுக்காததால் தன்னை பிளாக்மெயில் செய்து வருகிறார் என்றும் உதயராஜ் கதறினர்.

அவரின் புகார் அம்சங்கள் பார்ப்போம்.

‘’வேலை வாய்ப்புக்காக இணையத்தில் இருந்து குறிப்பிட்ட ஒரு ஆப்பை டவுன் லோட் செய்த போது செக்ஸ் சர்வீஸ் என  ஒரு பெண்ணிடமிருந்து சாட் வந்தது.. நானும் ஆர்வக்கோளாறு பிரியா என்று அந்தப் பெண்ணுடன் சாட் செய்ய ஆரம்பித்தேன். பின்னர் அந்த பெண் என்னிடம் செல்போனிலேயே பேச ஆரம்பித்தார்.. நூறு ரூபாய் கொடுத்து டிஜிட்டல் வேலட்டை வாங்கும் படி எஸ்எம்எஸ் அனுப்பினார் அதன்படி நான் 100 ரூபாய் அனுப்பி வைத்தேன்.

உடனே அழகான பெண்ணின் நிர்வாண படம் ஒன்று எனக்கு மெயிலில் வந்தது.. பின்னர் தனது செக்ஸ் வீடியோ அனுப்ப வேண்டுமென்றால் ஆயிரத்து 500 ரூபாய் தரும்படி கேட்டார்.  நான் முடியாது என்று சொல்லி அந்த நம்பரை பிளாக் செய்து விட்டேன்.

அதன்பிறகு பிரியாவை நான் செக்ஸ் சித்திரவதை செய்ததாகக் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளதாக எனக்கு மெயிலில் தகவல் வந்தது.. அதனால் பயந்துபோய் நான் உங்களிடம் புகார் கொடுக்க வந்தேன்” என்று காவல்துறையிடம் சொல்லி முடித்தார் உதயராஜ்.

போலீசார் ப்ரியாவின் செல்போன் நம்பரை தீவிரமான ஆராய்ந்தபோது, அதே எண்ணிலிருந்து பல்வேறு ஆண்கள் மீது பாலியல் புகார்கள் பல்வேறு காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.. அனைத்துமே அலட்சியத்துடன் கொடுக்கப்பட்ட ஆன்லைன் புகார்கள்..

பிரியாவின் செல்போன் சிம் எங்கே வாங்கப்பட்டிருக்கிறது என்று பார்த்தபோது அது ஒரு ஆணின் பெயரில் இருந்தது. குறிப்பிட்ட சிம்மை பயன்படுத்திவருபவர், நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த வள்ளல் குமார் ரீகன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் பிறகுதான் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவர ஆரம்பித்தன. பிரியா என்ற ஒரு பெண் கதாபாத்திரமே கிடையாது என்பதும் அந்த போனில் பிரியா என்ற பெயரில்,பெண் குரலில் பேசியவை அனைத்தும் ரீகனின் குரல்கள். என்பதும் தெரிய வந்துள்ளது.  ஒரு பெண்ணைப் போலவே அவ்வளவு தத்ரூபமாக செக்ஸியாக பேசி ஏராளமான ஆண்களை மயக்கி நீண்ட காலமாகப் பணம் பறித்து வந்திருக்கிறார்,

கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து ‘’பிரியா குரல்’’ மூலம் 350க்கும் மேற்பட்டோரிடமிருந்து பணம் பறித்திருக்கிறார் எஞ்சினியரிங் முடித்த ரீகன்.  பணம் தர முடியாதவர்களிடம் அவர்களைப் பற்றி காவல்துறையிடம் முறையிட்டிருப்பதாக ஆன்லைன் புகார்களைக் காட்டி பிளாக்மெயிலும் செய்திருக்கிறார்.

தற்போது வள்ளல் குமார் ரீகனுக்கு சிறை யோகம் அடித்துள்ளது.

– ஏழுமலை வெங்கடேசன்