கபினி அணையில் இருந்து வினாடிக்கு 35000 கன அடி நீர் திறப்பு

மைசூரு

ர்நாடகாவில் பெய்து வரும் கன மழை காரணமாக கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 35000 கன அடி நீர் திறக்கப் பட்டுள்ளது.

தென் மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளில் பெய்து வருகிறது.    இத்தகைய கனமழையால் கபினி அணி வேகமாக நிரம்பி வருகிறது.   தற்போது கபினி அணைக்கு வினாடிக்கு 37000 கன அடி நீர் வந்துக் கொண்டு இருக்கிறது.   அணை நிரம்பும் நிலையில் உள்ளது.

இதனால் கபினி அணையில் இருந்து வெள்ள முன்னெச்சரிக்கையாக தமிழகத்துக்கு விநாடிக்கு 35000 கன அடி நீர் திறக்கப்பட்டுளது.   இதே போல் மழை நீடித்தால் மேலும் நீர் திறக்கப்படும் என கர்நாடக அரசின் பொதுப் பணி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   கபினி அணியின் மொத்த நீர் மட்டமான 2284 அடியில் 2280 அடி நீர் இப்போது உள்ளது.

இவ்வாறு திறக்கப்படும் நீர் இரண்டு நாட்களில் தமிழகத்தின் ஒகேனக்கல்ல்க்கு வந்து சேரும் என கூறப்படுகிறது.    இதே போல் மைசூர் கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்தும் நீர் திறக்கப்பட்டு வருகிறது.  இப்போது இந்த அணையின் நீர் மட்டும் 90.8 அடியாக உள்ளது.   நீர் மட்டும் 100 அடியை தாண்டினால் மேலும் நீர் திறக்கப்படும் என தெரிய வந்துள்ளது.