இன்று 3509 பேர் பாதிப்பு: தமிழகத்தில் தீயாய் பரவும் கொரோனா… மொத்த பாதிப்பு 70ஆயிரத்தை தாண்டியது…

சென்னை:

மிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாக உள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 3509 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு 70,977  ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒரே நாள் பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டிய பாதிப்புகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சென்னையிலும்  இதுவரை இல்லாத அளவாக  இன்று 1,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து,  சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 47,000ஐ தாண்டியது.

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 45 பேர் பலியாகி உள்ளனர். இதன் காரணமாக மொத்த  உயிரிழப்பு எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது.

 இன்று 2,236  பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து  39,999பேர் குணமடைந்து வீடு  திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 151 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில்  தற்போது 30,064 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று மட்டும் 32,543 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தம் 10,08,974 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.