வேலூர்:

மிழகத்தின் 35-வது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் இன்று தொடங்கப்பட்டு உள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு வேலூர் மாவட்டத்த 3ஆக பிரிப்பதாக அறிவித்திருந்தது. அதன்படி  வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை என மூன்றாக பபிரித்து கடந்த 12-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்ட  புதிய மாவட்டத்தை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில்  துணைமுதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் கடந்த 225 ஆண்டுகளுக்கு முன்பாக, 1790 நவம்பா் 30-ம் தேதி ஆங்கிலேயா் காலத்தில்  தனி மாவட்டமாக இருந்தாக வரலாற்று நிகழ்வுகள் தெரிவிக்கின்றன. பின்னர் திருப்பத்தூா் மாவட்டப் பகுதிகள், சேலம் மாவட்டம், சித்தூா் மாவட்டம், வட ஆற்காடு மாவட்டம் , வேலூர் மாவட்டம் என மாவட்டங்களுடன் இணைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் திருப்பத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு உள்ளது.