நேபாள எல்லையில் சிக்கிய தமிழக யாத்ரிகர்கள் 36 பேர் மீட்பு…

சென்னை:

டமாநிலங்களுக்கு சுற்றுலாச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த யாத்ரிகர்கள் குழுவினர் 36 பேர் நேபாளத்தில் சிக்கிய நிலையில், அதிமுக எம்.பி. ரவிந்திரநாத் முயற்சியால் அங்கிருந்து மீட்கப்பட்டு, இந்திய எல்லையில் பத்திரமாக சேர்க்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை ஆர்.கே நகர். கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த முதியோர்கள் சுமார் 36 பேர் ஒரு குழுவினராக வட மாநிலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டனர். அவர்கள்  உத்தரப்பிரதேச மாநிலம் சுனாலி பகுதிக்கு அருகில் இந்திய நேபாள எல்லைப் பகுதியில் தங்கியிருந்த போது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நாட்டின் எல்லைகளும் மூடப்பட்டன.

இது குறித்து அவர்கள் குடும்பத்தின்ர அதிமுக  எம்.பி. வீந்திரநாத்குமார் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அவர் மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, மத்திய  வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உத்தரவின்பேரில் அவர்கள்  36 பேரும் இந்திய எல்லையில் உள்ள சோதனைச் சாவடி அருகில் இருக்கும் ஓட்டலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். விரைவில் அவர்கள் அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.