ஆட்டோ ஓட்டி பிழைக்கும் நடிகை.. கொரோனா படுத்தும்பாடு

--

கொரோனா ஊரடங்கு பலரை ஓட்டாண்டியாக்கியிருக்கிறது. ஏற்கனவே ஒரு சில வளரும் நடிகர்கள் காய் கறி விற்கவும், வேறு வேலை செய்தும் குடும்பத்தை காப்பாற்றுகின் றனர். இந்நிலையில் நடிகை ஒருவர் ஆட்டோ ஒட்டி பிழைத்து வருவது தெரிய வந்துள்ளது.


கேராளா மாநிலம் வள்ளிக்கோட் பகுதி யை சேர்ந்த மஞ்சு கடந்த 15 வருடமாக மேடை நாடகங்களில் நடித்து வருகி றார். இப்போது அவருக்கு 36 வயதாகி றது. கொரோனா ஊரடங்கால் நாடகம் எதுவும் நடக்காததால் வேலையும் வருமானமும் இல்லாமல் கஷ்ட்டப் பட்டார், நாடகங்களில் நடிக்கும்போது இரவு நேரங்களில் வீட்டுக்கு வருவ தற்கு நேரம் ஆகிவிடும் என்பதால் கேரள மக்கள் கலைக் கழகத்திடம் கடனாக நிதி பெற்று ஒரு ஒரு ஆட்டோ வாங்கி வைத்து அதை வீடு திரும்பு வதற்கு பயன்படுத்தி வந்தார். அந்த ஆட்டோவை ஒட்டி இப்போது பிழைப்பு நடத்துகிறார். அவரது உழைப்பை சக நாடக கலைஞர்கள் பாராட்டி உள்ளனர்.