கேப் டவுன்:

பிளாஸ்டிக் மாசு நிறைந்த ஈஸ்டர் தீவை 19 மணி நேரத்தில் நீந்தி 36 வயதான தென் ஆப்பிரிக்க பெண் சாதனை படைத்துள்ளார்.


ரபாநூய் என்றழைக்கப்படும் ஈஸ்டர் தீவு உலகின் கடைக்கோடியில் அமைந்துள்ளது.
உலக நாடுகள் எல்லாம் பிளாஸ்டிக் கழிவுகளை எல்லாம் இங்குள்ள கடலில்தான் கொட்டுகின்றனர்.
இதனால், ஈஸ்டர் கடல் தெற்கு பசிபிக்கின் குப்பைக் கூடமாக மாறிவிட்டது.

பிளாஸ்டிக் மாசு நிறைந்த இந்த கடலை உலகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லும் பொருட்டும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 36 வயதான சரா ஃபெர்குஷன் என்ற பெண்,64 கி.மீ தொலைவை 19 மணிநேரத்தில் நீந்தி உலக சாதனை படைத்துள்ளார்.

இதேபோன்று ஒருவர் பிளாஸ்டிக் நிறைந்த இந்த கடலை நீந்திக் கடக்க முயன்றபோது, உப்பின் தன்மை அதிகம் இருந்ததால் பாதியிலேயே திரும்பிவிட்டார்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஃபெர்குஷன், பிளாஸ்டிக் மாசு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தமது நோக்கம் என்று தெரிவித்தார்.
பிளாஸ்டிக் கடல்,