ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்: சிஏஜி அதிகாரிகளுடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு

டில்லி:

பேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தக்கோரி சிஏஜியிடம் (மத்திய கணக்கு தணிக்கை வாரியம்) காங்கிரஸ் இன்று மனு அளித்தது.

காங்கிரஸ் மூத்த  தலைவர்கள் குலாம்நபி ஆசாத் , அகமது படேல் , அசோக் கெலாட் , ஜெய்ராம் ரமேஷ். ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் சந்திப்பு ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு முறைகேட்டில் ஈடுபட்டடுள்ளதாகவும், அது குறித்து விசாரிக்க வேண்டும் ரபேல் என்று  சிஏஜி அதிகாரிகளை சந்தித்து குற்றச்சாட்டு கூறினர். அது தொடர்பாக மனுவும் அளித்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து வாங்கப்பட உள்ள ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பல கோடி ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் குற்றம் சாட்டி வருகிறது. ஒப்பந்தம் தொடர்பான விவரத்தை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வருகிறது.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ்- பாரதீய ஜனதா இடையே வார்த்தைப்போர் முற்றியுள்ளது. இந்த நிலையில், ரபேல் விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடு  குறித்து விசாரிக்க வலியுறுத்தி மத்திய தணிக்கை வாரியத்திடம் (சிஏஜி) இன்று காங்கிரஸ் கட்சி மனு கொடுத்துள்ளது.

அதில், ரபேல் போர் விமான கொள்முதல் தொடர்பான ஒப்பந்தம் முறையற்று இருப்பதாகவும், அதற்கான ஆவனங்களுடன் மனு கொடுக்கப்பட்டுள்ளது. சிஏஜி இதுகுறித்து ஆராயும் என்று நம்புவதாக என்றும் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா செய்தியாளர்களிடம் கூறினார்.

கார்ட்டூன் கேலரி