இன்று ஒரே நாளில் 3,645 பேர், மொத்த பாதிப்பு 74,622… தமிழகத்தில் அதிவேகத்தில் பரவும் கொரோனா

சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிவேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது.  இன்று ஒரே நாளில் புதிதாக 3,645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7 4,622  ஆக உயர்ந்துள்ளது.

இன்று 1,358 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை  41,357  பேர் குணமடைந்து வீடு  திரும்பியுள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,956 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  49, 690 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 957 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 122 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் 32,305 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.42% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,645 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 47 அரசு மற்றும் 42 தனியார் மையங்கள் என மொத்தம் 88 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 32,305 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 33,375 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனோவால் பாதித்தவர்களில் 2,211 பேர் ஆண்கள், 1,434 பேர் பெண்கள் 12 வயதுக்குட்பட்ட 3,633 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

13 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 62,105 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 8,884 பேருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தகவல் அளித்துள்ளனர்.