ரஷ்ய மாலில் பயங்கர தீ விபத்து: 37 பேர் சாவு…. 120க்கும் மேற்பட்டோர் காயம்

மாஸ்கோ:

ஷ்யாவின் சைபிரியா  கெமெரோவோ நகரிலுள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 37 பேர்  பலியானதாக தகவல் வெளியாக உள்ளது. மேலும் 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து சுமார் 3600 கி.மீ தொலைவில் உள்ள  சைபீரியாவில் பிரபலமான மால் ஒன்று உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் மாலில் கூட்டம் அலைமோதியது.

இநத மாலில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கணக்கானோர் சிக்கிகொண்டனர். அவர்கள் அவசர வழியாக வெளியேற முயற்சித்த வேளையில கூட்டத்தில் சிக்கியும், புகை காரணமாக மூச்சுத் திணறியும், தீயில் கருகியும், சிலர் மாடியில் இருந்து கீழே குதித்தனாலும்  இறந்துபோனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மாலில் சினிமா பார்க்க வந்தவர்கள், பொருட்கள் வங்க வந்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில், தீ விபத்து காரணமாக இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும், 120 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், 40 குழந்தைகள் உள்பட 69 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தீ விபத்து குறித்து தகவல அறிந்ததும், 62 தீயணைப்பு வண்டிகளுடன்,  சுமார் 288 மீட்பு படை வீரர்கள் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

மாலில் சுமார 1500 சதுர அடி அளவுக்கு தீ பரவியுள்ளதால் அந்த பகுதியே புகை மூட்டமாக காட்சியளித்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மால் கடந்த 2013ம் ஆண்டுதான் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.