ஆந்திரா : காரில் செம்மரங்களை விட்டு விட்டு கடத்தல்காரர்கள் மாயம்

கரி

ளில்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில்  செம்மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆந்திர மாநிலத்தில் இருந்து செம்மரம் கடத்துவது அதிகரித்து வருகிறது.   இதற்காக வனத்துறையினரும் காவல்துறையினரும் தொடர்ந்து சோதனை நடத்தி குற்றவாளிகளை பிடித்து வருகின்றனர்.   ஆயினும் இன்னும் இந்த கடத்தலில் சம்மந்தப்பட்ட முக்கிய புள்ளிகள் யாரும் சிக்கவில்லை.    தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது.

ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் ஏகாம்பர குப்பம் ரெயில் நிலையம் அமைந்துள்ளது.   இந்த ரெயில் நிலையம் அருகே ஒரு கார் பல மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.   யார் அதை நிறுத்தி விட்டு சென்றனர் என்பது தெரியாததால் காவல்துறைக்கு தகவல் அளிக்கபட்டது.

காவல்துறையினர் விரைந்து வந்து அந்த காரை சோதனை இட்டனர்.   அந்தக் காரில் 37 செம்மரங்கள் உள்ளது தெரிய வந்துள்ளது.   அந்த 37 செம்மரங்களை கைப்பற்றிய காவல்துறையினர் காரின் எண்ணைக் கொண்டு காரின் உரிமையாளரை தேடும் பணியில்  ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் இந்த செம்மரங்களை கடத்தல்காரர்கள் காரில் கொண்டு சென்றிருக்கலாம் எனவும் அவர்கள் எதனாலோ இந்த செம்மரங்களை காரில் விட்டு விட்டு மாயமாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.