சபரிமலை ஐயப்பன் கோவிலில் 37 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி

பரிமலை

பரிமலை ஐயப்பன் கோவிலில் 3 அர்ச்சகர்கள் உள்ளிட்ட 37 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கொரோனாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.  நேற்று மகர விளக்குக்காகக் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.  இங்குப் பணி புரியும் தொழிலாளர்கள் அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இந்த பரிசோதனை அர்ச்சகர்கள், தேவசம் போர்டு ஊழியர்கள் என அனைவருக்கும் நடத்தப்பட்டுள்ளது.  இந்த சோதனை முடிவில் 37 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதில் மூவர் அர்ச்சகர்கள் ஆவார்கள்.

இந்த 37 பேரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்டறியப்பட்டுத் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.  இந்த தகவல் பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது