தமிழகத்தில் இன்று 3,713 பேர் கொரோனாவால் பாதிப்பு.. மொத்த பாதிப்பு 78,335 ஆக உயர்வு

சென்னை:

மிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேர் கொரோனாவால் பாதிப்பு – தமிழக சுகாதாதாரத்துறை இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் சென்னையில் இன்று 1939 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 51, 699 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில்  கொரோனாவில் இருந்து 2,737 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை  44,094 பே ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,939 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  51,699  ஆக அதிகரித்துள்ளது.

இன்று 68 பேர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1025 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.308% ஆக உள்ளது.

இதுவரை கொரோனவால் 48,364 ( 61.71% ) ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் 29,968 பேர் (38.25%) பாதிக்கப்பட்டுள்ளனர். திருநங்கைகள் 21 பேர் (0.026%) பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 33,213 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்கு,  47 அரசு மற்றும் 42 தனியார் மையங்கள் என மொத்தம் 89 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இன்று மட்டும் 34,805 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களில்  2,300 பேர் ஆண்கள், 1,412 பேர் பெண்கள், திருநங்கை ஒருவர்.

12 வயதுக்குட்பட்ட 3,796 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 13 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 65,213 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 9,326 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுவரை  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில்  48,364 ( 61.71% ) ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் 29,968 பேர் (38.25%) பாதிக்கப்பட்டுள்ளனர். திருநங்கைகள் 21 பேர் (0.026%) பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை நடத்தப்பட்டுள்ள பரிசோதனைகள் எண்ணிக்கை 10லட்சத்து 25ஆயிரத்து59.

இவ்வாறு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.