ஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்

ந்தியாவின் மிகச்சிறந்த நகரங்களில் ஒன்றான சென்னை என்று அழைக்கப்படும் மெட்ராஸ்-ன் 379வது பிறந்த தினம் இன்று.

மெட்ராஸ் (இப்போது சென்னை என அழைக்கப்படுகிறது) இது நிறுவப்பட்டதிலிருந்து 378 ஆண்டு களை நிறைவு செய்து 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.

1639 -ம் ஆண்டு இதே நாளில்  செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஒரு நிலத்தின் பரிவர்த்தனையாக மெட்ராஸ் தொடங்கியது. ஆரம்ப காலத்தில், சென்னப்பட்டினம் என்றும், மதராசபட்டினம் என்றும் பெயர் சூட்டப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.  இன்று இந்தியாவின் மிகப்பெரிய மெட்ரோ நகரிங்களில் ஒன்றாக திகழ்கிறது.

மெட்ராஸ் ஸ்தாபிக்கப்பட்ட நாளை தற்போது சென்னை தினமாக கொண்டாடி வருகிறார்கள். இந்தியாவின் முதல் மாநகராட்சி என பெயர்பெற்ற பழமையான நகரம் தான் சென்னை. உலகின் பழமையான இரணடாவது மாநகராட்சி என்ற சிறப்பும் சென்னைக்கு உண்டு. உலகின் முதல் மாநகராட்சி இங்கிலாந்தின் தலைநகரமான பழமை வாய்ந்த லண்டன் மாநகரம் ஆகும்.

தற்போதைய சென்னையின் கடற்கரையை ஒட்டிய பகுதி 380 ஆண்டுகளுக்கு முன்னர் வெங்கடப்ப நாயக்கர் என்பவரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ம் நாள் கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாக பிரான்சிஸ் டே மற்றும் ஹென்றி ஹோகன் இருவரும் இணைந்து இந்தப் பகுதியை வாங்கியுள்ளனர். 16 ஆயிரம் வராகன் கொடுத்து வாங்கிய கடற்கரையை ஒட்டிய பகுதியில், தற்போது தலைமைச் செயலகமாக உள்ள ஜார்ஜ் கோட்டையைக் கட்டி வணிக மையமாக மாற்றினார்கள்.

அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்களின் இந்திய வணிகத் தலைநகரமாக விளங்கியது சென்னை. பழமையின் சுவடுகள் மாறாமல் காலத்துக்கேற்ற புதுமைகளைத் தாங்கி, தற்போது கம்பீரமாய் நிற்கிறது, வந்தோரை வாழவைக்கும்  சென்னை 400 வருடங்களுக்கு முன்னர் சின்னஞ் சிறு கிராமங்களாக பிரிந்து கிடந்தததாகவும், காலப்போக்கில் அவைகள் இணைந்து நகரமாக உருமாறியதாகவும்,  தற்போது இருக்கும் சிங்காரச் சென்னை மாநகரம் உருமாறி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மதராஸ் பட்டணத்தின் சிறு பகுதியை வெங்கட நாயக்கரிடமிருந்து பிரான்சிஸ் டே வாங்கிய இந்த நாளைத்தான் ‘சென்னை தினம்’ என இன்று கொண்டாடுகிறோம். மாதரசன் பட்டினம் தான், மாதரசன் பட்டினத்தை ஆங்கிலேயர்கள் தங்களின் உச்சரிப்புக்கு வசதியாக  மதராஸ்என்று அழைத்தார்கள் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதை நிரூபிக்கும் விதமாக  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவிரி பட்டினத்திற்குப் பக்கத்தில், பெண்ணேஸ்வரம் கிராமத்தில் உள்ள பாறையின் கல்வெட்டில் சென்னையைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. அந்தக் கல்வெட்டு கி.பி 1369-ம் ஆண்டில் வெட்டப்பட்டது. இந்தக் கல்வெட்டில் கடற்கரை பட்டினங்களான கோவளம், நீலாங்கரையான் பட்டினம், மாதரசன் பட்டினம் என குறிப்பிடப்பட்டு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

மாதரசன் பட்டினத்தின் சிறு பகுதியை வாங்கியதற்கான ஒப்பந்தம், இன்றும் சென்னை மியூசியத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இப்பேர்பட்ட மெட்ராஸ் என்ற பெயரை, 1996-ல் கருணாநிதி முதல்வராக இருந்த போது சென்னை என்று பெயர் மாற்றினார். அது முதல் சென்னை என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

இன்று வயது 379 ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ் சிங்காரச்சென்னையாக உருமாறி, வந்தாரை வாழ வைக்கும் தேசமாகி உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 379-year-old city, august22nd, chennai, Madras
-=-