தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: யார்… யார்?

சென்னை:

மிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளனர்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.

யார் யார் மாற்றப்பட்டுள்ளனர்….

1. தமிழ்நாடு கனிமவள நிர்வாக இயக்குனர் மகேசன் காசிராஜன் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் தொழில் நுட்பச் செயலாளராக மாற்றம்

2. எரிசக்தி துறை முதன்மைச் செயலர் நசிமுதீன் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளராக நியமனம்

3. தொழில் மற்றும் வர்த்தகத் துறை முதன்மைச் செயலர் மற்றும் தொழிதுறை ஆணையர்/இயக்குனர் ராஜேந்திர குமார் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை முதன்மைச் செயலாளராக மாற்றம்.

4. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையர் ஜோதி நிர்மலா பதிவு துறை ஐஜியாக மாற்றம்.

5. தமிழ்நாடு கைவினை பொருட்கள் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் சந்திரமோகன் எரிசக்தி துறை முதன்மை செயலாளராக நியமனம்

6.சிறுபான்மையினர் நல ஆணையர் வள்ளலார் பிற்படுத்தப்பட்டோர் ஆணையராக மாற்றம்

7. வேலூர் துணை ஆட்சியர் நாகராஜ் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக நியமனம்.

8. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி கழகத்தின் நிர்வாக இயக்குநராக நியமனம்.

9. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து இயக்குனராக மாற்றம்.

10. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனர் பாஸ்கரன் நகராட்சி நிர்வாக ஆணையராக மாற்றம்.

தலைமைச்செயலாளர் சண்முகம்

11. தர்மபுரி துணை ஆட்சியர் சிவன் அருள் திருப்பத்தூர் மாவட்ட சிறப்பு அதிகாரியாக நியமனம்.

12. சென்னை மாநகராட்சி வட்டார துணை ஆணையர் திவ்யதர்ஷினி ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு அதிகாரியாக மாற்றம்.

13. தமிழ்நாடு நகர்ப்புற ஆய்வுக் கழக இயக்குனர் கார்த்திகேயன் திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்.

14. தமிழ்நாடு மகளிர் வளர்ச்சி கூட்டுறவுத் துறை நிர்வாக இயக்குனர் பிரவின் பி.நாயர் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக மாற்றம்.

15. அரசு பொதுத் துறை துணைச் செயலர் மோகன் கலால் மற்றும் அமலாக்கப் பிரிவு ஆணையராக மாற்றம்.

16. தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய திட்ட இயக்குனர் கே செந்தில்ராஜ் தேசிய சுகாதாரப்பணி திட்ட இயக்குனராக மாற்றம்.

17. தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்கம் இயக்குனர் எஸ் நாகராஜன் தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநராக மாற்றம்.

18. பள்ளிக்கல்வித் துறை துணைச் செயலர் ஆன்னி மேரி ஸ்வர்ணா தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணைய தலைவராக மாற்றம்.

19. கூட்டுறவு சங்க துணை பதிவாளர் கோவிந்தராஜன் கூட்டுறவு சங்க பதிவாளர் ஆக மாற்றம்

20. தமிழ்நாடு காதி கிராமோத்யோக் பவன் தலைமை செயல் அலுவலர் நடராஜன் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் செயலாளராக மாற்றம்.

21. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் மகேஸ்வரி நிலநிர்வாக கூடுதல் ஆணையராக மாற்றம்.

22. நாமக்கல் மாவட்ட துணை ஆட்சியர் கிராந்தி குமார் வணிகவரித் துறை ஆணையராக (ஈரோடு) மாற்றம்.

23.நாகப்பட்டனம் துணை ஆட்சியர் கமல் கிஷோர் திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் திட்ட அதிகாரி, கூடுதல் ஆட்சியராக மாற்றம்.

24. திண்டிவனம் துணை ஆட்சியர் மெர்சி ரம்யா கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் திட்ட அதிகாரி, கூடுதல் ஆட்சியராக மாற்றம்.

25. திருப்பத்தூர் துணை ஆட்சியர் பிரியங்கா மதுரை ஊரக வளர்ச்சி மற்றும் திட்ட அதிகாரி, கூடுதல் ஆட்சியராக மாற்றம்.

26.நாகர்கோயில் துணை ஆட்சியர் விஷ்ணு சந்திரன் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) மற்றும் திட்ட அலுவலர் தூத்துக்குடி

27. விருதாச்சலம் துணை ஆட்சியர் பிரசாந்த் நாகப்பட்டினம் ஊரக வளர்ச்சி மற்றும் திட்ட அதிகாரி, கூடுதல் ஆட்சியராக மாற்றம்.

28. கஜா புயல் மறுகட்டுமானம் மற்றும் மறுவாழ்வு புனரமைப்பு கூடுதல் திட்ட இயக்குனர் , தஞ்சாவூர் , ராஜகோபால் சுங்காரா , கடலூர் , ஊரக வளர்ச்சி மற்றும் திட்ட அதிகாரி கூடுதல் ஆட்சியராக மாற்றம்.

29. கஜா புயல் மறுகட்டுமானம் மற்றும் மறுவாழ்வு புனரமைப்பு கூடுதல் திட்ட இயக்குனர் , நாகப்பட்டினம். பிரதீப் குமார் ராமநாதபுரம் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஊரக வளர்ச்சி மற்றும் திட்ட அதிகாரியாக மாற்றம்.

30. கடலூர் துணை ஆட்சியர் எஸ் கே எம் சரயு உதகமண்டலம் மலைப்பகுதி வளர்ச்சி திட்ட அதிகாரியாக மாற்றம்.

31. திருநெல்வேலி ஒழுங்கு நடவடிக்கை குழு ஆணையர் ஸ்ரேயா பி.சிங் விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக மாற்றம்.

32.மீன் வளத்துறை கூடுதல் இயக்குனர் ஜான் டாம் வர்கீஸ் மாற்றுத்திறனாளி இயக்குனராக மாற்றம்.

33. கன்னியாகுமரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஊரக வளர்ச்சி மற்றும் திட்ட அதிகாரி ராஹுல் நாத் பொதுத் துறை துணைச் செயலாளராக மாற்றம்.

34. உதகமண்டல மலை வளர்ச்சி திட்ட இயக்குனர் அமர் குஷ்வாஹா கூடுதல் ஊரக வளர்ச்சி மற்று பஞ்சாயத்து ராஜ் இயக்குனராக மாற்றம்

35. மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியர், ஊரக வளர்ச்சி மற்றும் திட்டத்துறை அதிகாரி அம்ரித் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையராக மாற்றம்.

36. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை துணைச் செயலர் ஜெயச்சந்திர பானு ரெட்டி பழனி திருக்கோயில் அறநிலைய துறை இணை ஆணையராக மாற்றம்.

37. தமிழக நகர்ப்புற வளர்ச்சி நகர்ப்புற உள்கட்டுமான நிதிச் சேவை நிறுவனத்தின் முதன்மைச் செயலர் மற்றும் நிர்வாக இயக்குனர் காகர்ல உஷா தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் முதன்மை செயலாளர்/ நிர்வாக இயக்குனராக மாற்றம்.

38. சேரன்மாதேவி துணை ஆட்சியர் ஆகாஷ் சென்னை மாநகராட்சி வட்டார துணை ஆணையராக மாற்றம்.

மேற்கண்ட உத்தரவை தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.