இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு…!

டெல்லி: இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்து உள்ளது.

கடந்த டிசம்பரில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்நாட்டில் இருந்து வரும் விமானங்களுக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தற்காலிக தடை விதித்ததன.

மேலும், சமீப காலமாக பிரிட்டனிலிருந்து வந்த பயணிகள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர். அதில், கொரோனா கண்டறியப்படுவோரின் மாதிரிகள் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அவர்களில் இந்தியா வந்தவர்களில் இதுவரை 38 பேருக்கு உருமாறிய கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் உறுதியான 38 நபர்களும் அந்தந்த மாநில அரசுகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்புடைய நபர்களை கண்டறிந்து அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.