ராக்கா:

சிரியாவில் நடைபெற்ற உள்நாட்டு போரில் கொல்லப்பட்ட 3,800-க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


2011 முதல் சிரியா அதிபர் பஷார் அல்ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

இந்த உள்நாட்டுப் போரை பயன்படுத்தி ஐஎஸ்.தீவிரவாதிகள் அங்கு ஊடுருவி ஆதிக்கம் செலுத்ததொடங்கினர். அவர்கள் ராக்கா நகரை தலைநகரமாக்கினர்.

அந்த நகரத்தை ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து மீட்க கடும் போர் நடந்து வந்தது.
இந்த போரில் அதிபர் ஆதரவு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப்படைகள் வான் தாக்குதல் நடத்தின.

அப்போது ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் 3,800-க்கும் மேற்பட்ட உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. கல்லறைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதில் 560 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வெளிநாட்டினர் உட்பட ஏராளமானோரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை.
ராக்கா நகரம் 85 சதவீதம் அழிந்துவிட்டது.

இறந்தவர்களை அடையாளம் காணும் பணியில் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு இடம்பெற்றுள்ளது.