தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக 3893 வழக்குகள் பதிவு: தமிழக தேர்தல்ஆணையம் பட்டியல் வெளியீடு…

சென்னை:

தேர்தல் தொடர்பாக இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்து தமிழக தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 5-4-2019ந் தேதி வரை பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் விவரம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்றைய தேதி வரை  தேர்தல் தொடர்பாக  3893 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார். இதில், சென்னையில் மட்டும் 1293 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சுவரில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் செய்தது தொடர்பாக 3246 வழக்குகள் பதியப்பட்டு உள்ளது. இதில் சென்னையில், 1181 வழக்குகளும் , அதையடுத்து அதிக பட்சமாக தென் மாவட்டங்களில் 731 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல, தேர்தல் தொடர்பான கிரிமினல் வழக்குகள் தமிழகம் முழுவதும் 302 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும்,  இதில் சென்னையில் அதிக பட்சமாக  61 வழக்குகளும் பதியப்பட்டு இருப்பதாக கூறியுள்ளது.

மக்கள் பிரிதிநிதித்துவ சட்டப்படி  291 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், சென்னையில் 51 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

வழக்குகள் பட்டியல்

 

கார்ட்டூன் கேலரி