சென்னை: 
மிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த மருத்துவமனை பட்டியலில் இருந்து 39 மருத்துவமனைகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், நோயாளிகள் அதிகரிப்பு காரணமாக,  அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி, தமிழகத்தில் 230 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை வழங்க தமிழகஅரசு அனுமதி வழங்கியிருந்தது.
ஆனால், பல தனியார் மருத்துவமனைகள், கொரோனா பாதிப்புடைய நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்க மறுத்துவந்தன.
இதையடுத்து,  39 தனியார் மருத்துவமனை மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து, அந்த மருத்துவமனைகளை கொரோனா சிகிச்சை வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது.
தேனி, கரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, ஓசூர், தருமபுரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர், கடலூர், தஞ்சாவூர், சேலம், திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள மொத்தம் 39 மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.